Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சாலையோர மரங்களில் குரங்குகள் தஞ்சம் குரங்குகளால் விபத்து நேரிடும் அபாயம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த தளவராம்பூண்டி கிராமத்தில் வனப்பகுதி உள்ளது. இந்த
வனப்பகுதியில் குரங்கு, மான், காட்டுப்பன்றி, பறவைகள் உள்ளிட்ட பல்வேறுஉயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் போதிய குடிநீர்தொட்டிகள் இல்லாததாலும் இந்த ஆண்டு மழை பொய்த்து போனதாலும்வனப்பகுதியில் உயிரினங்களுக்கு போதுமான குடிநீர் இன்றி குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனஉயிரினங்கள் அவ்வப்போது
அருகில் உள்ள கிராமப்புறங்களுக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில்
கடந்த ஒருமாதமாக உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில்
பருத்திக்கொள்ளை பகுதியில் உள்ள சாலையோர மரங்களில் 30திற்கும்
மேற்பட்ட குரங்குகள் தஞ்சமடைந்துளளன. இந்த குரங்குகள் அருகில் உள்ள
தளவராம்பூண்டி, பருத்திக்கொள்ளை, பட்டாங்குளம், வினோபாநகர்,
அ.பி.சத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து
வீட்டில் வைத்துள்ள பொருட்களை சிதறிவிடுவது மட்டுமின்றி வீட்டில்
உள்ளவர்களை அச்சுறுத்தி செல்கின்றது. மேலும் கிராமங்களில் உள்ள
அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை பள்ளி
நேரங்களில் அச்சுறுத்தி வருகின்றது. மேலும் உத்திரமேரூர் செங்கல்பட்டு
சாலையில் நடந்து செல்பவர்களிடமிருந்து கையில் கொண்டு செல்லும்
காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பிடிங்கி செல்கின்றனர். இதனால்
கிராம மக்கள் அச்சதுடனே சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மேலும் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது ஆபத்தினை
அறியாத குரங்குகள் திடீரென சாலையினை கடக்கின்றன. இதனால் பெரும்
விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு
அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட
வில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் சம்மந்தபட்ட நிர்வாக
அதிகாரியிடம் கூறி இந்த குரங்குகளை பிடித்து மீண்டும் வனப்பகுதியில்
கொண்டு விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments