Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் ஸ்ரீ.பிரம்மபுரீஸ்வரர் ஆலய தேரோட்டம்

உத்திரமேரூர், ஜன 18
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் அமைந்துள்ள
பட்டுவதனாம்பிகை உடனுறை ஸ்ரீ.பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்திருவிழாவில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.முன்னதாக கோயிலில் கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் விழா தொடங்கியது தெடாங்கிய நாள் முதல் தொடர்ந்து 13 நாள்கள் தைப்பூச திருவிழா நடைபெறும். விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வந்து பக்தர்கள் காட்சியளிப்பார். விழாயொட்டி கோவில் வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு அபிஷேக ஆராதனை முடிந்தபின் சிறப்பு அலங்காரம்
செய்யப்பட்டு திருத்தேர்மீதேர பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று
பக்தர்களுக்கு காட்சியளித்தது. பக்தர்கள் தீபாராதனை காட்டியும், தேங்காய்
உடைத்தும் சுவாமியை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் ஏற்பாடுகளை விழா குழுவினர்
மற்றும் பொது மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கு பெருநகர்
மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு
சுவாமியை வழிபட்டனர்.

No comments