Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் குளக்கரை குளம் நிரம்புவதில் சிக்கல் ஆக்கிரமிப்புக்களை அகற்ற பொது மக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் கிராமத்தில் பாப்பாங்குளம்என்ற குளம் ஒன்று உள்ளது.இக்குளத்தின்
கரையோரத்தில் கடந்த சிலஆண்டுகளாக சிலர் வீடுகள் கட்டி ஆக்கிரமித்து உள்ளனர்.இந்நிலையில்
குளக்கரை ஆக்கிரமிப்புக்களை அகற்றி குளத்தினை தூர்வாரி சீரமைத்து
கரைகளை பலப்படுத்திட வேண்டும் என சோமநாதபுரம் கிராம மக்கள்
கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் தனியார்
தொண்டு நிறுவனத்தின் உதவியோடு கடந்த மே மாதம் தூர்வாரும் பணி
துவங்கியது. தூர்வாரும் பணிக்காக ஆக்கிரமிப்புக்களை அகற்ற பேரூராட்சி
சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்கள்
ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு
ஊழியர்களின் பேச்சுவார்த்தையின் போது மாற்று இடம் வழங்கியபின்
ஆக்கிரமிப்புக்களை அகற்றிவிடுவதாக உறுதியளித்தனர். அதனடிப்படையில்
பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம்
வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்று இடம் வழங்கியும் இன்று வரை
ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் நீர் நிரம்புவது
சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் குளக்கரைகள் ஆக்கிரமிப்பின் பிடியில்
உள்ளதால் கரைகள் பலப்படுத்த முடியாமலும் கால்வாய்கள் சீரமைக்க
முடியாமலும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் காணப்படுகிறது. எனவே மாவட்ட
நிர்வாகத்தினர் சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆக்கிரமிப்புக்களை
அகற்றி நீர்நிலைகளை பாதுகாத்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

No comments