Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் புகையில்லா போகிப்பண்டிகை விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் போகிபண்டிகை கொண்டாடும் வகையில்புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில்
உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கி
பேரணியினை துவக்கி வைத்தார். பேரணியானது பேரூராட்சி வளாகத்தில் துவங்கி
கருணீகர் தெரு, சின்ன நாராசம் பேட்டைத் தெரு, எஸ்.பி.கோவில் தெரு, பஜார் வீதி,சன்னதி தெரு என முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது. பேரணியில் வரவிருக்கும் போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக்பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக்பொருட்கள் இருப்பின் அவற்றை சேகரித்து வீட்டிற்கு வரும் துப்புரவுபணியாளர்களிடம் வழங்கிட வேண்டும், புகையில்லா போகியினை கொண்டாடிகாற்று மாசுபடுவதை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள்ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து
கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments