Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மானாம்பதியில் திறந்தவெளி கிணற்றால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்

உத்திரமேரூர்: 20.01.2019
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் பஸ் நிலையம் அருகே கிராம நிர்வாகஅலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தின் வாயிலில் திறந்தவெளிக் கிணறு
ஒன்று உள்ளது. இந்த கிணறு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தின்
குடிநீருக்கான மிக முக்கிய நீராதாரமாக விளங்கியது. காலப்போக்கில் கிராமத்தில்
ஆங்காங்கே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து வீடுவீடாக குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டதால் இந்த கிணறானது முறையாக பராமரிக்காமல் கேட்பாறற்று காணப்படுகிறது. மேலும் இந்த கிணறு அருகாமையில் போஸ்ட் ஆபீஸ், ஊராட்சி மன்ற அலுவலகம் மிக அருகாமையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்டவைகள் உள்ளன. இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் சிலர் தாங்கள் பயன்படுத்தி மீதமுள்ள கழிவுகளை கிணற்றில் வீசிச்சென்று விடுகின்றனர். இதனால் கிணற்றில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளிக்கிணறு என்பதால் சிறுவர்கள் விளையாடும் போது உள்ளே விழும் அபாயமும் உள்ளது. இந்த
கிணற்றிற்கு மூடி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் பல்வேறு
அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த ஆண்டு பருவ மழை பெய்து போனதால் கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்த கிணற்றினை தூய்மைபடுத்தி கோடைகாலங்களில் கிணற்று நீரை பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் முறையாக பராமறித்து, கிணற்றுக்கு மூடி அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments