Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்போம் விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர்
தழிழகத்தில் நேற்று (புத்தாண்டு) முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த
தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உத்திரமேரூர் பேரூராட்சிசார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதன் தீமைகள்அதற்கான மாற்றுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி மூலம்உத்திரமேரூர் வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர்கேசவன் தலைமையில் நடந்த இந்த பேரணியானது பேரூராட்சி அலுவலகவளாகத்தில் துவங்கி சன்னதி தெரு, பஜார் வீதி, பெரிய நாராசம் பேட்டைத்தெரு, கேத்தாரீஸ்வரர் கோவில் தெரு வழியாக சென்று விழிப்புணர்வுஏற்படுத்தினர். அப்போது வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும்
பாதிப்புகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதற்கு மாற்றான
பொருகள் குறித்து ஒலிபெருக்கி மூலமும், துண்டுபிரசுரம் வழங்கியும்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் போது நுகர்வோர் பாதுகாப்பு
சங்கம், அப்துல்கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறுவர்கள் பலர்
கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments