Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இராவத்தநல்லூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தின் மேல்தள பூச்சு உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தப்பிய கிராம மக்கள்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த இராவத்தநல்லூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் எல்லை பகுதியில் கிராமநிர்வாக அலுவலர் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது சுமார் 20
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் கிராமத்தின் முக்கியஆவணங்கள் மற்றும் கிராம மக்களின் பட்டா சான்று, ஜாதி சான்று,
வருமானச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற பல்வேறு வகையான முக்கிய
சான்றுகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த கட்டிடமானது
கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகமாக
விளங்குகிறது. இவ்வாறான கட்டிடத்தினை முறையாக பராமரிக்காததால்
கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. இந்த கட்டிடத்தினை
சீரமைத்து தர கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர்
ஜெயச்சந்திரனை காண அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்
திடீரென கட்டிடத்தின் மேல்தளத்தில் ஒரு பகுதி பூச்சானது உடைந்து கிழே
விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கிராம மக்கள் அருகில் விழுந்ததால்
யாரும் காயமின்றி தப்பினர். இதனால் அச்சமடைந்த கிராம மக்கள்
அலறிஅடித்துக் கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியேறினர். பின்னர்
கட்டிடத்தின் மீதேறி பார்த்த போது கட்டிடம் முறையாக பராமரிக்கபடாததால்
கட்டிடத்தின் பூச்சு உடைந்து விழுந்தது தெரிய வந்தது. பின்னர் கிராம மக்கள்
கிராம நிர்வாக அலுவலரை வெளியேற்றி கட்டிடத்தினை பூட்டு போட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments