Disqus Shortname

உத்திரமேரூரில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில்
மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் சுமை பணி சங்க நிர்வாகி பொருமாள் தலைமை தாங்கினார்.
கம்யூனிஸ்ட் நிர்வாகி பாஸ்கர், வினாயகமூர்த்தி, குணா ஆகியோர்
முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச
ஊதியம் ரூ,18 ஆயிரம் என சட்டம் இயற்றி நடைமுறை படுத்திடு,
முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ, 3 ஆயிரம் வழங்கிடு,
உணவு பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்திடு, பெட்ரோல், டீசல்
மற்றும் காஸ் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திடு உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்
கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய தொழிற்சங்க மையம்,
சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம், லோடு ஆட்டோ சங்கம் உள்ளிட்ட
பல்வேறு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments