Disqus Shortname

மருத்துவான்பாடி கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த மருத்துவான்பாடி கிராமத்தில் நேற்று வருவாய் திட்ட
முகாம் நடந்தது. முகாமில் உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி
தலைமை தாங்கினார். மண்டல தனிவட்டாச்சியர் கீதாலஷ்மி, வட்ட
வழங்கல் அலுவலர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்செல்வன் வரவேற்றார். முகாமில் குடும்ப
அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா
மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட
கோரிக்கைகள் அடங்கிய 48 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது
அதில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 30 மனுக்கள்
கணினி பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்கான அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சியின் போது நெகிழி தவிற்பது மற்றும் கட்டாய கழிவறை
குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவான்பாடி
தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியின் போது
சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது முகாமில் கிராம மக்கள் அனைவருக்கும்
நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு பொது மக்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பொது மக்கள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

No comments