Disqus Shortname

திரிசூலக்காளியம்மன் ஆலயத்தில்1008 தைப்பூசப் பால்குட ஊர்வலம்


உத்திரமேரூர்: 21-01-2019
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற
ஸ்ரீ.திரிசூலக்காளியம்மன் ஆலயத்தின் 36-ம் ஆண்டு தைப்பூசப் பால்குடஊர்வலம் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர்
விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி சிறப்புயாக யாக
பூஜைகள் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் மஞ்சல் ஆடை அணிந்து
திருப்புலிவனம் குளக்கரை மாரியம்மன் ஆலயத்தில் இருந்து
பால்குடங்களுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து
கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களை சுற்றியபின் கோவிலை
வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பக்தர்கள் அம்மனுக்கு தங்கள் கரங்களால் பாலாபிஷேகம்
செய்து அம்மனை வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் 1008 பக்தர்கள்
அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு
சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் வளாகத்தில் விழாவிற்கு வந்திருந்த
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் ஸ்ரீதிரிசூலக்காளியம்மன்
வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் விழாவிற்கான ஏற்பாடுகளை
விழாக்குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவிற்கு திருப்புலிவனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments