Disqus Shortname

சாலவாக்கத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உத்திரமேரூர்: 28-12-2018
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுக்கும்
விதமாக கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சிறப்பு
கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி
அலுவலர் மாரிச்சாமி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சக்திவேல்
அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
பொருட்கள் பயன்படுத்துவதால் நிலத்தட நீர் பாதிப்பு, கால்நடைகள் பாதிப்பு,
மரம் செடி, கொடிகள் வளர்ச்சி பாதிப்பு, சுற்று சூழல் பாதிப்பு என பல்வேறு
வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்புகளை உண்டாகின்றனர்.
இவ்வாறாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க அரசு வரும் ஜனவரி 1 ஆம்
தேதியிலிருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த
தடை விதித்துள்ளது. எனவே பொது மக்கள் இதனை கருத்தில் கொண்டு
தினசரி உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மட்கும்
தன்மையுடைய மாற்று பொருட்களை பயன்படுத்தி சுற்று சூழலை பாதுகாக்க
வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம
சபைக் கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள்
பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியேற்றனர். நிகழ்ச்சியில் கிராம மக்கள்
பலர் கலந்து கொண்டனர்.

No comments