Disqus Shortname

கட்டியாம்பந்தல் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் செப் 5
உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தில் தூய்மை பாரத
இயக்கத்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று
நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார்
ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டாட்சியர் அகிலாதேவி, பள்ளி தலைமை
ஆசிரியை மஞ்சுளா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர்கள் கபாலி,
பாலசுப்பரமணியன், தூய்மை பாரத இயக்கத்திட்ட ஒருங்கிணைப்பாளர்
சுரேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். பேரணியில்
கட்டியாம்பந்தல் அரசினர் தொடக்கப் பள்ளி மாணவ – மாணவியர்கள் கலந்து
கொண்டு தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள்,
நிலத்தடி நீர் பாதிப்பு, பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பட்டியல்,
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாடோம் என உறுதி ஏற்போம்
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறும்,
துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
பேரணியானது பள்ளி வளாகத்தில் துவங்கி கிராமத்தில் உள்ள முக்கிய
வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள், அரசு துறை
அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments