Disqus Shortname

தமிழக மக்கள் பசுக்களை பேணிப்பாதுகாக்க வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள்

உத்திரமேரூர் 2018 செப், 02 

உத்திரமேரூர் அடுத்த சித்தமல்லி கிராமத்தில் கிரிஜாராமநாதன் என்பவருக்கு சொந்தமாக உள்ள சம்பிரதாய கோசாலையில் கோகுலாஷ்டமி முன்னிட்டு நடந்த கோ பூஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, கோட்டாச்சியர் ராஜீ வட்டாட்சியர் அகிலாதேவி உட்பட மாவட்ட நிர்வாகத்தினர் தமிழக ஆளுநருக்கு சிறப்பு வரவேற்ப்பு அளித்தனர். அதன்பின் நடைபெற்ற கோகுலாஷ்டமி கோ பூஜையில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழிபாடு செய்து சுவாமியை வழிபட்டார்.  பிறகு அங்குள்ள பசுக்களுக்கு உணவளித்தார்.  அப்போது அங்கு திரண்டிருந்த பொது மக்களை பார்த்து அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறினார். இதையடுத்து தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்தியா முழுவதும் பசுக்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வழிபட்டு நடத்தி வருவதாகவும் அதேபோல தமிழக
மக்களும் பசுக்களை பேணிப் பாதுகாக்க அதிகளவில் கோசாலையும் உருவாக்க வேண்டும் தமிழக மக்களுக்கு கோகுலாஷ்டமி வாழ்த்துக்களையும் தெரிவித்தார் நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments