Disqus Shortname

உத்திரமேரூரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் க.சுந்தர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்


உத்திரமேரூர் 2018 ஆக 28

உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் நிவேதிதா, தாஸ்பிரச்சன்னா, பூர்ணிமா, மோனிகா ஆகியோர் முன்னணிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலர் க.சுந்தர் எம்.எல்.ஏ. கலந்துரையாடினார் முகாமினை குத்து விளக்குக்கேற்றி துவக்கி வைத்து சிறப்பாகசெயற்றினார். உடன் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகரச் செயலாளர் பாரிவள்ளல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கு உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 887 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் 316 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டு இரத்த பிரிவு அறிவிக்கப்பட்டது. இம்முகாமிற்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாரடைப்பு, சிறுநீரக நோய், எலும்பு, காது, மூக்கு, தொண்டை, பெண்கள் சிறப்பு பிரிவு, கண் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை, இ.ஜி.ஜி, எக்ரேட் உட்பட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பெற்றவர்களுக்கு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 34 நபர்கள் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிகிச்சை செய்தனர். இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

No comments