Disqus Shortname

களியாம்பூண்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


உத்திரமேரூர் 2018 ஆக, 27
உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி தலைமை தாங்கினார். பள்ளி துணை தலைமை ஆசிரியர் நரேஷ்குமார், தூய்மை பாரத இயக்கத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வேலு அனைவரையும் வரவேற்றார். பேரணியில் களியாம்பூண்டி அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள், நிலத்தடி நீர் பாதிப்பு, பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பட்டியல், இவ்வாறான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என உறுதி ஏற்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறும், துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பேரணியானது பள்ளி வளாகத்தில் துவங்கி பஜார் வீதி, யாதவர் தெரு, மேட்டுத் தெரு, வினாயகர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


No comments