Disqus Shortname

நடந்த மனு நீதி நாள் முகாமில் 172 பயணாளிகளுக்கு 2 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்


உத்திரமேரூர் ஆக, 29
உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் கிராமத்தில் நேற்று மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமில் 172 பயனாளிகளுக்கு ரூ 2 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் கோட்ட அலுவலர் ராஜீ தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி, தனி வட்டாட்சியர் கீதாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் இந்திராகாந்தி முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை 07 நபர்கள், திருமண உதவித் தொகை – 12 நபர்கள், கல்வி உதவித் தொகை – 11 நபர்கள், இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை - 07 நபர்கள், பட்டா மாற்றம் – 05, சிறுவிவசாயி சான்று – 32 நபர்கள், வாரிசு சான்று – 06, பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டை – 44 நபர்கள், இருளர் சான்றிதழ் – 48 நபர்கள் உட்பட 172 பயனாளிகளுக்கு ரூ 02 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மனு நீதி நாள் முகாமினையொட்டி சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி என்றத் தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் காஞ்சி மாவட்டத்தில் வயலக்காவூர் அரசு பள்ளி மாணவியர்கள் முதல் இரண்டு இடத்தினை பிடித்துள்ளனர். இதனை கோட்டாட்சியர் ராஜீ மற்றும் க.சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோர் வாழ்த்தினர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி, பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் ஞானசேகரன், கிராம மக்கள், அரசுதுறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments