Disqus Shortname

திருப்புலிவனத்தில் உலக பல்லுயிர் தினம்

உத்திரமேரூர் மே, 22
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
தமிழ்நாடு அரசு வனத்துறையின் சார்பில் உலக பல்லுயிர் தின நிகழ்ச்சி
நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்
சிவபெருமான் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர்
சச்சின் போஸ்லோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்
வனப்பகுதியில் மரங்கள் வளர்த்து பாதுகாத்திட வேண்டும், அழிந்து வரும்
உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், வனப்பகுதியில் வாழும் வன
உயிரினங்களை பாதுகாப்பதின் அவசியம், எளிதில் தீப்பற்றக் கூடிய
பொருட்களை வனப்பகுதியில் கொண்டு செல்லக் கூடாது, வன உயிரினங்கள்
அச்சுறுத்துவதும், வன உயிரினங்களை அழிப்பதும் சட்ட விரோதமான
செயலாகும், பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் உபயோகிக்கக்
கூடாது உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் பொது
மக்களிடம் விளக்கிக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-
மாணவியர்களுக்கிடையே உலக பல்லுயிர் தின நாளையொட்டி கட்டுரை,
ஓவியம் பேச்சுப் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து பள்ளி வளாகத்தினை சுற்றி பள்ளி மாணவ-மாணவியர்கள் மற்றும்
வனத்துறையினர் இணைந்து தூய்மை செய்து, பள்ளியினை சுற்றியுள்ள
மரங்களை பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-
மாணவியர்கள், பொது மக்கள் வனக்காப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments