Disqus Shortname

காவனூர் புதுச்சேரியில் கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

உத்திரமேரூர் ஜீன் 22

உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் திமுக தலைவர்
கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த
கூட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் தலைமை
தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய துணை செயலாளர் இரா.ஸ்டாலின்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். காஞ்சி
தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், தலைமை கழக பேச்சாளர் சாவல்பூண்டி
சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில்
தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்
டி.கே.கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், மாவட்ட
பிரதிநிதி வெ.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்
திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 92 மரக்கன்றுகள் பொது
மக்களுக்கு வழங்கியும் தொடக்கப்பள்ளி, நூலக வளாகம் போன்ற முக்கிய
இடங்களில் திமுக சார்பில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான திமுக
தொண்டர்கள் உட்பட பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments